Translate

Thursday, December 30, 2021

கோப்பைகள் பல விதம்

 

  


வாசகர்களே, இன்று கோப்பைகளை பற்றி எனது எண்ணங்களை பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். 

கோப்பை என்னும் வார்த்தை portugese மொழிக்கு சொந்தமான "copo" விலிருந்து உருவானதாகும். "Copo" என்றால் கிளாஸ் / டம்ளர் என்று அர்த்தம். மக்கள் மரபுமொழியிலும் நாட்டுமரவுமொழியிலும் இந்த வார்த்தை பயன்படுத்தப் படுகிறது. 

உடலின் புத்துணர்ச்சிக்கு ஒரு கோப்பை தேநீர் பருகுவதைப் போல,  உள்ளத்தின்  புத்துணர்ச்சிக்கு ஒரு கோப்பை தன்னம்பிக்கையைப் பருகுங்கள்!

எந்தத் துறையைச் சேர்ந்த  போட்டியாளராக இருந்தாலும்,  தன்னம்பிக்கை அளிப்பது, வெற்றி பெறவிருக்கும் அந்தத் தங்கக் கோப்பை! 

மின்மினிப் பூச்சிகளை துரத்திப் பிடித்து ஒரு கோப்பையில் மூடி வைத்து அதன் அழகை ரசிப்பது ஒரு சுகமான அனுபவம்!

அடுக்களையோ அடுமனையோ, அங்கு கோப்பை அவசியம் தேவை. முக்கியமாக அடுமனையில், கோப்பையில் அளந்து சமைத்தால்தான் பதமாகவும், சுவையாகவும்  இருக்கும்!

வாயினைச் சுற்றி கைகளை கோப்பை வடிவில் வைத்து  பள்ளத்தாக்குகளில் நின்று உரக்கக் கத்தினால், நமது குரல் எதிரொலிக்கும். அது ஒரு சுகமான அனுபவம்!

சுருக்கமாகக் கூறினால் , 

"கோப்பை = புத்துணர்ச்சி = தன்னம்பிக்கை = வெற்றி = அழகு = சுவை = சுகம்"...

இன்னும் ஏதாவது இருக்கிறதா? 


 

உங்கள் கருத்துக்களை " comments " -ல் எழுதுங்கள் .